இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை: இளையராஜாவுக்கு பதிலடி கொடுத்த மதன் கார்க்கி

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
lankasri.com

பாடல்கள் இசையமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை என்று பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா, பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியனுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தார். இது திரை உலகினர் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்த நோட்டீஸ் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இது குறித்து பாடலாசிரியர் மதன் கார்க்கி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில் பாடல்களின் ராயல்டி இசை அமைப்பாளருக்கு மட்டும் சொந்தமில்லை. அந்த பாடலை எழுதிய பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளருக்கும் சொந்தம். இளையராஜா சொல்வது சரிதான் என்றாலும் கூட, அவரே வெளியில் பாடல்களை பாடினால் பாடலாசிரியரிடமும், தயாரிப்பாளரிடமும் அனுமதி பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.

எஸ்பிபி மற்றும் சித்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியதற்கு பதிலாக ஒரு ஃபோன் கால் செய்து இந்த விஷயத்தை சொல்லியிருக்கலாம் என மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments