பல பில்லியன் டொலருக்கு பேரம் பேசப்பட்ட Qualcomm நிறுவனம்

Report Print Givitharan Givitharan in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் Qualcomm மற்றும் Broadcom என்பன இரு பெரும் இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களாகும்.

இவை இரண்டும் மொபைல் சாதனங்களுக்கான சிப்களை வடிவமைத்து வருகின்றன.

இந்நிலையில் Qualcomm நிறுவனத்தினை கையகப்படுத்தும் முயற்சியில் Broadcom இறங்கியிருந்தது.

இதற்காக 105 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தருவதாகவும் தெரிவித்திருந்தது.

எனினும் இந்த வாய்ப்பினை Qualcomm நிறுவனம் நிராகரித்துள்ளது.

Broadcom நிறுவனம் மொபைல் சாதனங்களைத் தாண்டி இணையத்திற்கு பயன்படும் மொடெம், செட்டப் பாக்ஸ் மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெகோடர்கள் என்பவற்றிற்கான சிப்களை உருவாக்குவதிலும் காலடி பதித்துள்ளது

இந்நிலையிலேயே மேற்கண்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஆனால் மொபைல் சாதனங்களுக்கான சிப் வடிவமைப்பில் பெயர்பெற்று விளங்கும் Qualcomm நிறுவனத்தின் நிராகரிப்பினால் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்