ஆப்பிள் ஐபோன்களின் வேகம்: வேண்டுமென்றே குறைக்கப்பட்டதா?

Report Print Printha in நிறுவனம்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரைமேட் லேப்ஸ் நிறுவனமானது பழைய ஐபோன்களின் வேகம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த பிரைமேட் நிறுவனம் தான் ஆப்பிள் ஐபோன்களின் வேகத்தை கணக்கிடும் செயலியை உருவாக்குகிறது.

இந்நிறுவனம் ஐபோனில் அதிக மின்சக்தி பயன்பாட்டை குறைக்க ஐபோன் 6S மற்றும் ஐபோன் 7 மாடல்களின் வேகம் வேண்டுமென்றே குறைக்கப்பட்டதாக கூறியுள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகள் ஸ்மார்ட்போனின் வேகத்தை பாதிப்பதுடன், போன் பேட்டரி செயலிக்கு தேவையான திறனை வழங்குவதிலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.

அதனால் கடந்த ஆண்டு ஐபோன் 6, ஐபோன் 6S மற்றும் ஐபோன் SE மாடல்களுக்கு ஆப்பிள் வழங்கிய புதிய அம்சத்தில் இந்த பிரச்சனை ஏற்பட்டு ஐபோன்கள் திடீரென ஸ்விட்ச் ஆஃப் ஆவதை தவிர்க்க பேட்டரி செயலிக்கு செல்லும் திறனின் அளவை குறைத்தது.

எனினும் இது பிரச்சனை ஏற்படும் போது மட்டும் இயங்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் வெளியிட்ட மென்பொருள் அப்டேட் ஐபோன் வேகத்தையும் குறைத்துள்ளது.

மேலும் நிறுவனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்