கணினிக்கு உகந்த மொழி இது தான்: நாசாவின் அரிய கண்டுபிடிப்பு

Report Print Raju Raju in கணணி
0Shares
0Shares
lankasrimarket.com

விஞ்ஞான ரீதியான பல புதிய விடயங்களை உலகிற்கு வெளிக்கொண்டு வருவதில் நாசா நிறுவனம் எப்போதும் முன்னணி வகிக்கும்.

தற்போது கணினி சம்மந்தமான ஒரு புதிய விடயத்தை நாசா கூறியுள்ளது. அதாவது, கணினிக்கு உகந்த மொழி சமஸ்கிருதம் என்பது தான் அது!

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உள்ள சமஸ்கிருத மொழி உலகில் மிக தொன்மையான மொழிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

நாசா விஞ்ஞானிகள் கூறுகையில், ஆங்கில மொழியை விட வாக்கியம் அமைப்பதற்கும், கணினி போன்ற இயந்திரங்களுக்கு ப்ரோக்ராம்களை வடிவமைப்பதிலும் சமஸ்கிருத மொழி மிக எளிதாக உள்ளது என்பது தான் நிதர்சன உண்மையாகும்.

சமஸ்கிருதத்தில் இருக்கும் வார்த்தைகளை மனிதர்கள் மூளையை சுறுசுறுபாக்கும் வல்லமை படைத்ததாகும்.

ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்கள் சமஸ்கிருதத்தில் இருக்கும் முக்கிய காரணம் அதன் உண்மை ஜீவனை அந்த மொழி மூலமே உணர முடியும்.

அதுமட்டுமில்லாமல் கணினி போன்ற இயந்திரங்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது தான் அதன் முக்கிய சிறப்பாகும் என அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் கணணி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments