சாம்பியன்ஸ் டிராபி: இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான்

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது.

இன்றைய இறுதி ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இதில் நாணயசுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

பரம்பரை எதிரிகளான இரு அணிகளும் இறுதிப் போட்டியில் மோதுவதால் அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணியின் பகர் சமான், அசார் அலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பகர் சமான் 3 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பும்ப்ரா பந்தில் டோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.

ஆனால், க்ரீஸிற்கு வெளியில் கால்வைத்து பந்து வீசியதால் நோ-பால் ஆனது. இதனால் பகர் சமான் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இருவரும் தொடக்க முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இந்தியாவின் பந்து வீச்சு எந்த வகையிலும் அச்சுறுத்தும் வகையில் இல்லை.

இதனால் இருவரும் அரைசதம் நோக்கி முன்னேறினார்கள். 20-வது ஓவரில் இருவரும் அரைசதம் அடித்தனர். அசார் அலி 61 பந்தில் அரைசதமும், பகர் சமான் 60 பந்தில் அரைசதமும் அடித்தனர்.

இருவரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 23 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 128 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments