கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது எப்போது? விராட் கோஹ்லி பேட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
Cineulagam.com

இந்திய கிரிக்கெட் அணிக்காக அடுத்த பத்து ஆண்டுகள் விளையாடுவேன் என விராட் கோஹ்லி கூறியுள்ளார்.

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு தற்போது 28 வயதாகிறது, ஒன்பது ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வரும் கோஹ்லி உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்கிறார்.

முன்னாள் இந்திய வீரர் சச்சினின் பல்வேறு சாதனைகளை கோஹ்லி நிச்சயம் முறியடிப்பார் என பலர் கூறி வரும் நிலையில் அவர் ஓய்வு பெறுவது எப்போது என கேள்வி எழுப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோஹ்லி, எத்தனை காலம் நம்மால் விளையாட முடியும் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

நான் தற்போது கொடுத்து கொண்டிருக்கும் இதே முயற்சியை தொடர்ந்து கொடுத்தால், அடுத்த 10 ஆண்டுகள் இந்தியாவுக்காக விளையாட முடியும் என கோஹ்லி கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்