அணித்தலைவராக கமிந்து மெண்டிஸ் தெரிவு! இலங்கை அணி அறிவிப்பு

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
348Shares
348Shares
lankasrimarket.com

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவில் வருகிற நவம்பர் மாதம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளது.

எட்டு அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் நேரடியாக தகுதிபெற்றுவிட்டன.

இந்நிலையில் இப்போட்டியில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணித்தலைவராக கமிந்து மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ளார், சிறந்த ஆல்ரவுண்டராக வலம் வரும் மெண்டிஸ், கடந்தாண்டு நடந்த U19 உலகக் கிண்ணத் தொடரில் இரு கைகளாலும் பந்துவீசி அசத்தியவர்.

துணைத்தலைவராக ஜெஹான் டேனியல் அறிவிக்கப்பட்டுள்ளார், இவர் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக அறியப்படுகிறார்.

கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட்டு வரும் இலங்கை அணி, மேலும் பயிற்சிக்காக கண்டிக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

அணிவிபரம்

 • Kamindu Mendis – Captain
 • Ashen Bandara
 • Dananjaya Lakshan
 • Nishan Mathusanka
 • Nipuna Dananjaya
 • Hasitha Boyagoda
 • Krishan Sanjula
 • Navindu Fernando
 • Jehan Daniel – Vice Captain
 • Randir Ranasingha
 • Thisaru Rashmika
 • Nipun Ransika
 • P Jayawickrama
 • Kalana Perera
 • K. K. Kevin

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்