பங்குச் சந்தை வளர்ச்­சிக்கு உத­வாது வர்த்­தக போர்!

Report Print Fathima Fathima in பொருளாதாரம்
0Shares
0Shares
lankasrimarket.com
அமெரிக்காவில் இறக்குமதியாகும் உருக்குக்கு, 25 சதவீதமும், அலுமினியத்துக்கு, 10 சதவீதமும் சுங்க வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர், டொனால்ட் டிரம்ப் அறிவித்தவுடன், பல நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி. கூடவே, ‘வர்த்தக போர்கள் நல்லவை; அவற்றில் வெற்றி பெறுவதும் எளிது’ என, பேசியிருக்கிறார். இதற்கு, பல முக்கிய நாடுகள் கடுமையாக எதிர்­வி­னை­யாற்­றி­யுள்­ளன.
டிரம்புக்கு என்ன ஆச்சு?

டொனால்டு டிரம்ப், அமெ­ரிக்­கா­வில் அதி­பர் ஆனது முதல், ‘அமெ­ரிக்­காவே முத­லில்’ என்ற வர்த்­தக கொள்­கையை கடை­பி­டித்து வரு­கி­றார். அதன் ஒரு பகு­தி­யாக, உள்­நாட்­டில் வேலை­வாய்ப்­பு­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும்; தொழில்­களை ஊக்­கு­விக்க வேண்­டும் என, முயற்சி செய்து வரு­கி­றார்.

இதற்­குத் தடை­யாக இருக்­கக்­கூ­டிய விஷ­யங்­களை உடைத்து வரு­கி­றார்.பின்­னணிஅமெ­ரிக்க உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத் துறை­யி­லும் பெரிய சரிவு ஏற்­பட்­டுள்­ளது. 2000ம் ஆண்­டில், 112 மில்­லி­யன் டன்­னாக இருந்த உருக்கு உற்­பத்தி, 2016ல், 86.5 மில்­லி­யன் டன்­னா­கக் குறைந்து விட்­டது.

1.35 லட்­சம் பேர் வேலை செய்த இடத்­தில் இப்­போது, 83 ஆயி­ரம் பேர் மட்­டுமே வேலை செய்­கின்­ற­னர். இதே­போல், அலு­மி­னிய உற்­பத்­தி­யி­லும் பெரும் சரிவு.

முக்­கிய கார­ணம், வெளி­நா­டு­களில் இருந்து அமெ­ரிக்­கா­வில் இறக்­கு­மதி செய்­யப்­படும் உருக்கு மற்­றும் அலுமனியத்தின் விலை, மிக­வும் குறைவு. அந்த இறக்­கு­ம­தி­க­ளைக் கட்டுப்படுத்தினால், உள்­நாட்­டுத் தொழில்­கள் லாபகரமாகும் என்ற எண்­ணத்­தில், டிரம்ப், வரி விதிக்­கும் முடி­வுக்கு வந்­தி­ருக்­கி­றார்.

யாருக்கு பாதிப்பு?

முதல் பாதிப்பு, அமெ­ரிக்­கா­வுக்கு அரு­கி­லேயே இருக்­கும் கன­டா­வுக்­குத் தான். தன் உருக்கு உற்­பத்­தி­யில், 90 சதவீதத்தை­யும், அலு­மி­னிய உற்­பத்­தி­யில், 41 சத­வீ­தத்­தை­யும் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­கிறது, கனடா. இறக்கு­ம­திக்கு வரி என்­ற­வு­டன், கனடா அல­று­கிறது.

இரண்­டா­வது இடத்­தில் இருப்­பது, ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­கள். அதற்கு அடுத்த நிலை­யில் தான், தென் கொரியா, மெக்­சிகோ, பிரே­சில், ஜப்­பான், தைவான், சீனா, ரஷ்யா, துருக்கி ஆகிய நாடு­கள் உள்­ளன.

ஆரம்­பத்­தில் இருந்தே, சீனா­வுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை டிரம்ப் மேற்­கொண்டு வரு­கி­றார். இந்த நடவடிக்கையும் சீனா­வுக்கு எதி­ரா­னது என, கரு­தப்­பட்­டது. ஆனால், அப்­படி நடக்­க­வில்லை. சீனா­வின் உருக்கு உற்­பத்­தி­யில், 50 சத­வீ­தத்­திற்கு மேல், அவர்­க­ளு­டைய தேவைக்கே பயன்­ப­டு­கிறது.

ஏன் இந்த நட­வ­டிக்கை?

ஐரோப்­பிய ஒன்­றி­யம் உட்­பட பல நாடு­களில், அமெ­ரிக்­கா­வில் இருந்து இறக்­கு­ம­தி­யா­கும் பொருட்­க­ளுக்கு கடுமையான வரி விதிக்­கப்­ப­டு­கிறது. இந்­தி­யா­வில் கூட, அமெ­ரிக்க மோட்­டார் சைக்­கி­ளான, ‘ஹார்லி டேவிட்சன்’பைக் மீது, 100 சத­வீத இறக்­கு­மதி வரி விதிக்­கப்­பட்­டது.

இப்­போது, அது பாதி­யா­கக் குறைக்­கப்­பட்டு இருந்­தா­லும், இன்­ன­மும் இத­னால், அமெ­ரிக்க அர­சுக்கு எந்­த­வி­த­மான பல­னும் இல்லை.ஆனால், அமெ­ரிக்­கா­வில் இறக்­கு­ம­தி­யா­கும் பிற நாட்­டுப் பொருட்­க­ளுக்கு இறக்­கு­மதி வரியே இல்லை அல்­லது சிறிய அள­வில் இருக்­கிறது. இத்­த­கைய வர்த்­தக ஏற்­றத்­தாழ்வு, அவ­ரைக் கடுப்படித்துவிட்டன. அதன் விளைவு தான், உருக்கு மற்­றும் அலு­மி­னி­யத்­தின் மீதான வரி.

இத­னால் என்ன பலன்?

இனி­மேல் அமெ­ரிக்­கா­வில் உற்­பத்தி செய்­யப்­படும் உருக்கு, அலு­மி­னி­யத்­தையே அமெ­ரிக்க நிறு­வ­னங்­கள் வாங்க வேண்­டி­யி­ருக்­கும். அத­னால், அங்கே உற்­பத்தி பெரு­கும், வேலை­வாய்ப்­பு­கள் பெரு­கும் என்­பது எதிர்­பார்ப்பு.

ஆனால், இப்­படி நடந்­ததேஇல்லை என்­பது தான் அமெ­ரிக்க சரித்­தி­ரம் நமக்கு உணர்த்­து­கிறது. ரொம்ப துாரம் போக வேண்­டாம்.கடந்த, 2002ம் ஆண்டு, அப்­போது அதி­ப­ராக இருந்த, ஜார்ஜ் புஷ், இறக்­கு­மதி செய்­யப்­பட்ட உருக்கு மீது வரி விதித்­தார்.

உள்­நாட்டு உற்­பத்­தி­யா­ளர்­க­ளைக் காப்­பாற்ற வேண்­டும் என்­பது தான் அப்­போ­தும் கார­ணம். இத­னால், உற்­பத்தி சற்றே உயர்ந்­தது என்­னவோ உண்மை. ஆனால், அத­னால் ஏற்­பட்ட பாதிப்­பு­கள் மிக அதி­கம்.விலை அதி­க­மாக இருந்த காரணத்­தால், பல நிறு­வ­னங்­கள், அமெ­ரிக்க உருக்கை வாங்க மறுத்­தன.

விளைவு, மொத்த தேவையே சரிந்து போனது; அத­னால், வேலை­வாய்ப்­பு­களும் குறைந்து போயின. கிட்­டத்­தட்ட இரண்டு லட்­சம் வேலை­கள் பறி­போ­யின. வேறு வழி­யில்­லா­மல், இந்த வரி, 2003ம் ஆண்டு இறு­தி­யில் திரும்­பப் பெறப்­பட்­டது.அமெ­ரிக்க டயர் நிறு­வ­னங்­க­ளைக் காப்­பாற்ற, 2009ல், அப்­போ­தைய அதி­பர், பராக் ஒபாமா, இறக்­கு­மதி செய்­யப்­படும் சீன டயர்­கள் மீது வரி விதித்­தார்.

வழக்­கம் போல், கொஞ்­சம் வேலை­வாய்ப்­பு­க­ளைக் காப்­பாற்ற முடிந்­தது. ஆனால், வழக்­கம் போல், விலை அதி­கம் என்­ப­தால், உற்­பத்­தியே சரிந்து போனது. காப்­பாற்­றப்­பட்ட வேலை­களை விட, மொத்­தத்­தில் இழந்த வேலை­களே அதி­க­மா­னது. வேறு வழி­யில்­லா­மல், இந்த வரி­யும் பின்­னர் திரும்­பப் பெறப்பட்டது.

அமெ­ரிக்கா, முற்­றி­லும் வெளி­நாட்டு உற்பத்தி பொருட்களைப் பயன்­ப­டுத்­து­வ­தால், அங்கே விலைகள் சற்று மலி­வாக இருக்­கின்­றன.அமெ­ரிக்க உருக்­கையும், அலுமி­னி­யத்­தை­யும் பயன்­ப­டுத்­தத் துவங்­கி­னால், அங்கே விற்­கும் குளிர்­பா­னங்­கள் முதல், கார்­கள் வரை அனைத்­தின் விலை­யும் உயர்ந்துவி­டக் கூடும். தன் தலை­யில் தானே மண்ணை அள்­ளிப் போட்­டுக் கொள்­வ­தற்கு ஒப்­பான நட­வ­டிக்கை இது என, அமெ­ரிக்க பொரு­ளா­தார வல்­லு­னர்­களே எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

எதிர்ப்­பலைஅமெ­ரிக்­கா­வுக்­குள் நடப்­பது ஒரு­பக்­கம் இருக்­கட்­டும். சர்­வ­தேச அள­வில் இத்­த­கைய, ‘தற்­காப்பு நட­வ­டிக்­கை­கள்’ ஏற்­ப­டுத்­தும் தொடர் விளை­வு­கள் தான் முக்­கி­ய­மா­னவை. சர்­வ­தேச நிதி­ய­மும், உலக வர்த்­தக அமைப்­பும், இத­னால் ஏற்­படும் பாதிப்­பு­க­ளைப் பற்றி எச்­ச­ரித்­துள்­ளன.

ஐரோப்­பிய ஒன்­றி­யம், தக்க பதி­லடி கொடுக்­கப்­படும் என்­கிறது. கனடா அதி­பரோ, இது அநி­யா­யம், ஏற்க முடி­யாது என மிரட்­டு­கி­றார்.

பல பங்குச் சந்தைகள்

உடன­டியாக பெரும் சரிவைக் கண்டன.உருக்கு மற்றும் அலுமினிய உற்பத்தி நிறுவன பங்குகள் அடி வாங்கியுள்ளன. இவையெல்லாம் இன்னும் சில நாட்களில் சரியாகிவிடக் கூடும். ஆனால், அமெரிக்காவின் நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை தான், அனைத்து நாடுகளையும் கவலை கொள்ள வைத்துள்ளது.

ஒவ்வொரு நாடும், ‘தற்காப்பு நடவடிக்கை’க்குள் இறங்கினால், அப்புறம் எப்படி சுதந்திரமான பொருளாதாரமும், வளர்ச்சியும் ஏற்படும்; ஒவ்வொரு நாடும் பதிலடி கொடுக்கத் துவங்கினால், சுமுக உறவுகள் பாதிக்கப்படாதா?வர்த்தகம் மோதலால் வளர்வதில்லை; அது, இணக்கத்தின் மீது கட்டமைக்கப்படுவது. இதை, அமெரிக்க அதிபர் டிரம்ப் உணர்ந்­து­கொள்ள வேண்டியது அவசியம்.

- Dina Malar

மேலும் பொருளாதாரம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்