சந்திவெளி விநாயகர் கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு

Report Print Nesan Nesan in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

மட்டக்களப்பு - சந்திவெளி விநாயகர் கனிஷ்ட வித்தியாலயத்தில் கல்வி பயிலும் முதலாம் தர மாணவர்களிற்கான புத்தகப்பைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் ரீ. கணபதிப்பிள்ளை தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரனின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கபட்டுள்ளன.

இந்த நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் செயலாளர் வ.கமலதாஸ், பொருளாளர் என்.உதயகுமார் சந்திவெளி சிரேஸ்ட விநாயகர் வித்தியாலய அதிபர் எம்.தவராஜா, பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது உரையாற்றிய விநாயகமூர்த்தி முரளிதன்,

இந்த பாடசாலையில் கடந்த புலமை பரீட்சையில் 10 மாணவர்கள் சித்தி அடைந்துள்ளமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்வரும் காலங்களில் இந்த பாடசாலைக்கான தேவைகள் என்னவென்று அதிபரிடம் கேட்டறிந்து அதனை நிறைவேற்றி தருவது தனது கடமை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்