யாழில் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு இலவச கருத்தரங்கு!

Report Print Samaran Samaran in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

சப்ரகமுவ, பல்கலைக் கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சப்ரகமுவ, ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு இலவச வழிகாட்டல் கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை காலை 10மணிக்கு யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற இருக்கின்றது.

சப்ரகமுவ, ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகங்களில் விளையாட்டு விஞ்ஞான முகாமைத்துவம்,உடற்தொழில் பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சைக்கு தோற்ற இருக்கும் மாணவர்களை கலந்து பயன்பெறுமாறு சபரகமூவா பல்கலைக்கழக பீரயோக விஞ்ஞான பீட தமிழ் சமூகம் கேட்டுக் கொள்கின்றது.

மேலும் பயண,தங்குமிட ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்களும் அன்றைய தினம் நடைபெற இருக்கின்றது.

மற்றும் வெகு விரைவில் கிழக்கு மாகாணத்தில் ஒரு வழிகாட்டல் கருத்தரங்கும் ஏற்பாடு செய்யப்படவிருக்கின்றது

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்