மனைவி மற்றும் மகளின் அறையை பூட்டி தீயிட்டு கொளுத்திய தாடி பாலாஜி

Report Print Deepthi Deepthi in பொழுதுபோக்கு
0Shares
0Shares
Seylon Bank Promotion

தனது மனைவி மற்றும் மகள்கள் தூங்கிகொண்டிருந்தபோது அறையை பூட்டி நடிகர் தாடி பாலாஜி தீயிட்டு கொளுத்திய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

நடிகர் தாடி பாலாஜிக்கும் அவரது மனைவி நித்யாவுக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி, மாறி புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ஒரு வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இதில் பாலாஜி, நித்யா மற்றும் அவரது குழந்தை போர்ஷிகாவை ரூமில் அடைத்து வெளியே தீவைவைத்ததாக காண்பிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அந்த வீடியோவில் பேசிய மனைவி நித்யா, தனது சைக்கோ புத்தியினால் பாலாஜி இவ்வாறு செய்துள்ளார், பொலிசிற்கு போன் செய்துள்ளேன், எனக்கும் எனது குழந்தைக்கும் எதாவது நடந்தால் அதற்கு பாலாஜி தான் காரணம் என கூறுகிறார்.

மேலும் மகள் போஷிகாவும் கண்ணீர் விட்டு அழுகிறார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்