அன்று 25 ரூபாய்: இன்று கோடிகளில் சொத்து! சாதனை தமிழரின் கதை

Report Print Raju Raju in தொழிலதிபர்
0Shares
0Shares
lankasrimarket.com

ஸ்ரீ ராஜா பிரியாணி ஹொட்டல் மற்றும் தங்கும் விடுதி தமிழ்நாட்டின் கோவையில் மிக பிரபலமாகும்.

இன்றைய சந்தை மதிப்பீட்டில் இந்த ஹொட்டலின் மதிப்பு சுமார் 10 கோடி ரூபாய் ஆகும். இதன் உரிமையாளர் பெயர் ராஜா (54)

தமிழ்நாட்டின் தேவக்கோட்டை அருகில் இருக்கும் கிராமத்தில் ராஜா பிறந்தார். வறுமையான குடும்பத்தில் பிறந்த அவர் 9 வயதில் மானாமதுரைக்கு வீட்டு வேலை செய்ய பெற்றோரால் அனுப்பட்டார்.

ராஜா வேலை செய்த வீட்டின் உரிமையாளர்கள் முறுக்கு தயாரித்து விற்பனை செய்தார்கள்.

அங்கு ஒரு வருடம் பணியாற்றிய ராஜாவுக்கு உணவு வியாபாரத்தில் பெரிய ஆர்வம் ஏற்பட்டது.

10 வயதில் மீண்டும் பெற்றோரிடம் சென்ற ராஜா தேன் மிட்டாய் மற்றும் கடலை மிட்டாய்களை வாங்கிப் பள்ளிக்கு வெளியில் விற்று அதன் மூலம் கணிசமான லாபத்தையும் பார்த்தார்.

இதில் கிடைத்த பணம் மூலம் தனது பள்ளிப்படிப்பை ராஜா தொடர்ந்தார், ஆனால் எல்லாம் அவரின் 16 வயது வரை தான்.

கடந்த 1979ல் வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்த ராஜா கையிலிருந்த 25 ரூபாயை எடுத்து கொண்டு தனது இரு நண்பர்களை அழைத்து கொண்டு கோவைக்கு வந்தார்.

அங்கு மாதம் 45 ரூபாய் சம்பளத்தில் ராஜாவுக்கு ஹொட்டலில் வேலை கிடைத்தது. முதலில் ஹொட்டலுக்கு சாப்பிட வருபவர்களுக்கு தண்ணீர் வைக்கும் வேலை அவருக்கு தரப்பட்டது.

பிறகு கடின உழைப்பால் குறைந்த காலத்திலேயே சர்வராக உயர்ந்தார்.

இடையிடையில் தையல் வேலையும் கற்று அதிலும் பணம் சம்பாதித்தார்.

சமையல் கலையை அங்கு நன்றாக கற்ற பின்னர் தான் சேமித்து வைத்திருந்த சிறிதளவு பணத்தை வைத்து ராஜா ஒரு உணவகத்தை திறந்தார்.

கடின உழைப்பு மற்றும் திறமையால் ராஜாவின் ஹொட்டல் வளர்ச்சியை நோக்கி சென்றது.

லாபம் அதிகமாக வர தொடங்க, அருகிலேயே ஒரு இடத்தை வாங்கி இன்னொரு கடையையும் திறந்தார்.

சுவை காரணமாக வியாபாரம் சூடி பிடிக்க லட்சங்களில் வருமானம் வர ஆரம்பித்தது. பிறகு கடந்த 2007ல் சேமிப்பு பணம் மற்றும் வங்கி கடன் மூலம் 70 லட்சத்தில் தங்கும் விடுதியை ராஜா வாங்கினார்.

இதனுடன் ராஜாவுக்கு மூன்று பிரியாணி கடைகளும் தற்போது உள்ளது. இதற்கு ஸ்ரீ ராஜா பிரியாணி ஹொட்டல் மற்றும் தங்கும் விடுதி என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எந்தொரு பின்புலமும் இல்லாமல் கடின உழைப்பின் மூலமே ராஜா இந்த உயர்ந்த நிலையை அடைந்துள்ளார்.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்