கூகுள் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்த ஐரோப்பிய யூனியன்

Report Print Athavan in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com

கூகுள் நிறுவனத்தை சிறு சிறு குட்டி நிறுவனங்களாக மாற்றிவிடுவோம் என ஐரோப்பிய யூனியன் தலைமை ஆணையர் Margrethe Vestager reckons எச்சரிக்கை விடுத்துள்ளார்

தேடு பொறி நிறுவனமான கூகுல் ஐரோப்பிய யூனியனில் பல்வேறு சிறு தொழில்களுக்கு அதன் கூகுள் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக கூகுள் நிறுவனத்திற்கு பல கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது.

இந்நிலையில், கூகுள் போன்ற தேடுபொறி (Search Engine) இணையதளங்கள், வர்த்தக (e-Commerce) இணையதளங்கள் போன்றவற்றில் தேடல் முடிவுகளை (Search Result) ஒழுங்குபடுத்தும் புதிய விதிகளை உருவாக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.

இதனிடையே செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பேசிய ஐரோப்பிய யூனியன் தலைமை ஆணையர் (Antitrust) மார்க்ரெத் வெஸ்டேஜர், கூகுள் நிறுவனத்தை சிறு நிறுவனங்களாக மாற்றிவிடுவதாக எச்சரிக்கை விடுத்தார் என்று டெலிகிராஃப் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு கூகுளின் தேடல் முடிவுகளில் (Search Results) அந்நிறுவனத்தின் சொந்த பொருட்களை முன்னிலைப்படுத்தியதற்காக ரூ.2.97 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்