தினமும் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

Report Print Thuyavan in உணவு
479Shares
479Shares
lankasrimarket.com

ஓய்வில்லாமல் உழைக்கும் நாம் அன்றாட வாழ்வில், நமது உடல் எடை கூடுவதற்கு காரணமாக இருக்கும் உணவுகளை பற்றி யோசிப்பதே இல்லை.

ஜங்க் வகை உணவுகளை முழுவதுமாக தவிர்த்து புரதச்சத்துள்ள பானத்தை மட்டும் குடித்து வந்தாலும் கூட, தினசரி உணவு பழக்கங்களில் சில தவறுகளை நமக்கே தெரியாமல் செய்து தான் வருகிறோம்.

அது என்னவென்பதை இப்பதிவில் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு உணவின் ருசியை கூட்ட பெரிதாக பயன்படுத்தப்படுகிறது. நாளடைவில் அது உங்கள் உடல் எடையையும் அதிகரிக்கச் செய்யும். அதனால் அடுத்த முறை உருளைக்கிழங்கிற்கு பதில் நற்பதமான காய்கறிகளை பயன்படுத்துங்கள்.

பால்

பல பிரச்சனைகளுக்கும் தீர்வாக பால் இருப்பது உண்மை தான். ஆனால் அதனை அடிக்கடி பருகி வந்தால் அது உங்கள் வளர்ச்சிக்கு தடையாகவும் இருக்கும்.

தூங்கும் முன்பு, காலை உணவின் போது அல்லது மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி உண்ணும் போது பால் குடித்தால் கொஞ்சம் இடைவேளை எடுத்துக் கொள்வது நல்லது.

இதையும் தாண்டி பால் குடிக்கவில்லை என்றால் உங்கள் சோம்பல் நீங்கி, உடல் எடை குறைந்து, சருமம் பொலிவடைகிறதா என்பதை கவனியுங்கள்.

இனிப்பு பண்டங்கள்

நம்மில் பல பேருக்கு உணவருந்திய பிறகு இனிப்பு பண்டங்கள் ஏதாவது உண்ணும் பழக்கம் இருந்து தான் வருகிறது. இது தேவையற்றது என்பதும் நமக்கும் தெரியும்.

சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் உங்கள் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய் போகும்.

தினமும் டெசெர்ட் வகை உணவுகள் உண்ணுவதை தவிர்த்தால் நீங்கள் ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம். வார இறுதி நாட்கள் அல்லது ஏதாவது விசேஷ நாட்களில் மட்டுமே எடுத்துகொள்வது சிறந்த ஒன்று.

நொறுக்கு தீனி

நொறுக்குத் தீனிகளை தவிர்த்தாலே நம் ஆயுட் காலம் சீராக இயங்கி வரும். குறிப்பாக மாலை வேளையில் பசி எடுக்கும் போது சாண்ட்விச் அல்லது சமோசா போன்ற நொறுக்குத் தீனிகளை உண்ணத் தூண்டும்.

அதனால் நட்ஸ், வெண்ணெய் அல்லது தயிர் போன்றவற்றை உங்கள் மாலை வேளை நொறுக்குத் தீனியாக பயன்படுத்துங்கள்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்