ரொனால்டோ அசத்தல் கோல்: தொடரை வென்ற ரியல் மாட்ரிட்

Report Print Kabilan in கால்பந்து
0Shares
0Shares
Cineulagam.com

ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணி, கிளப் உலக கிண்ண போட்டித் தொடரை 2வது முறையாக வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது.

கிளப் அணிகளுக்கு இடையேயான பிபா உலக கிண்ண கால்பந்து தொடரின் இறுதிப் போட்டி, அபுதாபியில் நடந்தது. இந்த போட்டியில் ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணியும், பிரேசிலின் கிரெமியோ எப்சி அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 53வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ Free Kick வாய்ப்பின் மூலமாக கோல் அடித்தார்.

இந்த கோலே ரியல் மேட்ரிட் அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதியில், 1-0 என்ற கோல் கணக்கில் கிரெமியோ எப்சி அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது ரியல் மேட்ரிட்.

இது அந்த அணிக்கு இரண்டாவது சாம்பியன் பட்டமாகும். மேலும் ரொனால்டோ, தொடர்ந்து 2வது ஆண்டாக தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்