தீவிரவாதிகளை ஒழித்து கட்ட பிரான்ஸ் ஜானாதிபதி எடுத்த அதிரடி முடிவு

Report Print Santhan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்சில் தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க, அந்நாட்டு ஜனாதிபதி மேக்ரான் புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படை ஒன்றை உருவாக்கியுள்ளார்.

பிரான்சில் சமீபகாலங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதனால் பிரான்சில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இருந்த போதும் பிரான்சில் தீவிரவாதிகளால் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று கூட பிரான்ஸில் உள்ள தேவாலயத்தின் எதிரில் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒருவரால், பொலிஸ் அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் பிரான்ஸில் புதிதாக தீவிரவாத ஒழிப்புப் படையை உருவாக்கியுள்ளார் ஜனாதிபதி மெக்ரான். மேலும், இந்தத் துறை ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரான்ஸில் தீவிரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பர் மெக்ரான்.

கடந்த 2 வருடங்களில் தீவிரவாதிகளால், பிரான்ஸில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments