மகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட்ட அமைச்சர்: கைது செய்யப்படுவாரா?

Report Print Peterson Peterson in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸ் நாட்டில் முன்னாள் சட்ட அமைச்சர் ஒருவர் தனது மகளுக்கு மக்களின் வரிப்பணத்தை செலவிட்டதாக தற்போது எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான பிரான்கோயிஸ் ஹாலண்டே அமைச்சரவையில் Michel Mercier என்பவர் சட்ட அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.

பாராளுமன்ற உதவியாளராக தனது மகளான Delphine என்பவரை நியமித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் கடந்த 2012 முதல் 2014 வரை மாத ஊதியமாக 2,000 யூரோவை அமைச்சர் வழங்கி வந்துள்ளார்.

இந்நிலையில், பிரான்ஸில் வெளியாகும் பத்திரிகை ஒன்று பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளது.

அதில், குறிப்பிட்ட காலத்தில் அமைச்சரின் உதவியாளராக அவரது மகள் பணியாற்றவில்லை எனவும், அந்த ஆண்டுகளில் லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அவர் படித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களின் வரிப்பணத்தை தனது மகளுக்கு அமைச்சர் செலவிட்டுள்ளதாக அந்த பத்திரிகை குற்றம் சாட்டியுள்ளது.

பத்திரிகை வெளியிட்டுள்ள தகவலை தொடர்ந்து முன்னாள் சட்ட அமைச்சர் மீது வழக்கு பதியப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது உதவியாளர்களாக குடும்ப உறுப்பினர்களை நியமித்து வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த நடைமுறைக்கு பிரான்ஸ் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரான் முற்றுப்புள்ளி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்