பிரான்ஸை தாக்க வரும் சூறாவளி: அபாய எச்சரிக்கை விடுப்பு

Report Print Basu in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

பிரான்ஸ் தீவுகளான செயின்ட் மார்ட்டின் மற்றும் செயின்ட் பார்ட்ஸ் தீவுகளை மூன்று தினங்களுக்கு முன் இர்மா சூறாவளி புரட்டி போட்ட நிலையில் தற்போது ஜோஸ் சூறாவளி தாக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

பிரான்சிற்கும் நெதர்லாந்திற்கும் இடையில் உள்ள பிரான்சின் வெளிநாட்டு பிரதேசங்களான செயின்ட் மார்ட்டின் மற்றும் செயின்ட் பார்ட்ஸ் தீவுகளுக்கு பிரான்ஸ் வானிலை மையம் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜோஸ் சூறாவளி கடக்கும் போது மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் காற்று வீசும், 100 மி.மீ., மழை பொழியும், கடலில் அலைகள் ஆறு முதல் எட்டு மீட்டர் வரை எற்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரான்ஸ் தீவுகளான செயின்ட் மார்ட்டின் மற்றும் செயின்ட் பார்ட்ஸில் ஏற்பட்ட இர்மா சூறவாளி காரணமாக 1.2 பில்லியன் யூரோக்கள் சேதம் ஏற்பட்டள்ளதாக காப்பீடு நிறுவனம் ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு சூறாவளி தாக்கவுள்ளது அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்