ஜெருசேலம் விவகாரம்: அமெரிக்கா முடிவுக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

Report Print Raju Raju in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜெருசேலத்தை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்ததற்கு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை அங்கீகரிப்பதாக நேற்று அறிவித்தார்.

மேலும், தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகம் ஜெருசேலத்துக்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில் பிரான்ஸும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் தனது டுவிட்டர் பதிவில், ஜெருசேலம் விவகாரத்தில் அமெரிக்காவின் முடிவை பிரான்ஸ் ஏற்க மறுக்கிறது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசேலம் இருப்பதையும், இந்த இரண்டு மாநிலங்களின் சமாதானத்துக்கும், பாதுகாப்புக்கும் உள்ள உறவையும் பிரான்ஸ் ஆதரிக்கிறது.

விவகாரத்தை சாந்தப்படுத்துவதில் தான் கவனம் செலுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்