80 உலகத்தலைவர்களுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி அழைப்பு

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

முதலாம் உலகப்போரின் நூற்றாண்டு நிறைவு நாளை முன்னிட்டு உலகின் 80 முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 1914-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்ற முதலாம் உலகப் போர் 1918-ஆம் ஆண்டு நவம்பர் 11-ஆம் திகதி அன்று முடிவுக்கு வந்தது.

இந்த போர் முடிந்த இந்த ஆண்டுடன் 100 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் அதனை நினைவு கூறும் வகையில் மிகப்பெரிய நிகழ்வு ஒன்று நடத்திட பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் முடிவு செய்துள்ளார்.

அதன்படி மிக பிரமாண்டமாக நடத்திட திட்டமிடப்பட்டுள்ள இந்த விழாவிற்கு உலகின் 80 முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மக்ரோன் தெரிவித்துள்ளார்.

மேலும், “நம் வரலாற்றை இந்த நூற்றாண்டு மக்களும் அறிய வேண்டும், உலகின் ஒழுக்கத்தினை பறைசாற்ற வேண்டும் என்றும் ஜனாதிபதி மக்ரோன் தெரிவித்துள்ளார்.

இந்த விழாவில் உலகின் 80 முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்