பிரான்சில் 20 தீவிரவாத தாக்குதல்கள் முறியடிப்பு

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸில் கடந்தாண்டு மட்டும் 20 தீவிரவாத தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருப்பதாக நாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தலைமையில் கடந்த 7-ஆம் திகதி அன்று, சார்லி ஹெப்டோ தாக்குதலின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அதன்பின் 8-ஆம் திகதி பேட்டியளித்த நாட்டின் உள்விவகாரத்துறை அமைச்சர் Gerard Collomb, கடந்த 2017-ஆம் ஆண்டில் மட்டும் 20 தாக்குதல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

நாடு முழுவதும் தீவிரவாதிகள் தீட்டிய பல்வேறு திட்டங்கள், பொலிசார் மற்றும் உளவுத்துறையின் உதவியுடன் தடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதும் இதே சூழல் நிலவி வருவதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த 2015-ஆண்டு பிரபல பத்திரிக்கையான சார்லி ஹெப்டோவில் இஸ்லாமிய மதத்தை சீண்டும் வகையில் கேலிச்சித்திரம் வெளியிட்டதால் 11 பத்திரிக்கையாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அது முதல் தற்போது வரை 241 நபர்கள் பயங்கரவாத தாக்குதலுக்கு பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்