பிரான்சில் சிகரெட் விலை உயர்வால் விற்பனை சதவீதம் இவ்வளவு குறைந்துள்ளதா? வெளியான தகவல்

Report Print Santhan in பிரான்ஸ்
175Shares
175Shares
lankasrimarket.com

பிரான்சில் சமீபத்தில் சிகரெட்களின் விலையெற்றப்பட்டதால், அதன் விற்பனை வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் சுங்கத்துறை இயக்குநரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரியில் இருந்து ஜூலை மாதம் வரை 9.2 வீதத்தினால் சிகரெட் பெட்டிகளின் விற்பனை சரிந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து புகைபிடிப்பவரிடம் கேட்ட போது, முன்னதாக நான் ஒரு நாளைக்கு ஒரு பெட்டி சிகரெட் புகைப்பேன்.

ஆனால் தற்போது ஒரு நாளைக்கு நான்கு சிகரெட்டுகள் மாத்திரமே புகைக்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

மொத்தமாக 94 மில்லியன் சிகரெட் பெட்டிகள் விற்பனையாகாமல் இருந்துள்ளது.

பிரான்சில் கடந்த நான்கு வருடங்களாக ஒரே விலையில் இருந்த சிகரெட் பெட்டிகள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக விலையெற்றப்பட்டு வருகிறது.

தற்போது சராசரியாக €8.30 யூரோக்களுக்கு ஒரு சிகரெட் பெட்டி விற்பனையாகின்றது. இந்த விலையேற்றமே சிகரெட் விறனையில் ஆதிக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டுக்குள் €10 யூரோக்களை சிகரெட் எட்டிகள் எட்டிவிடும் எனவும், அடுத்தகட்ட விலையேற்றம் இவ்வருடக்கடைசியில் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்