நூலிழையில் தப்பிய விமானம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: திக்..திக்.. நிமிடங்கள்

Report Print Jubilee Jubilee in ஜேர்மனி
நூலிழையில் தப்பிய விமானம்.. அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்: திக்..திக்.. நிமிடங்கள்
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் விமானியின் சாமர்த்தியத்தால் தரையிறங்கும் கடைசிநேரத்தில் விமானம் ஒன்று அதிர்ஷ்டவசமான தப்பியது. இதனால் அதில் இருந்த அனைவரும் உயிர்தப்பினர்.

முனிச் விமான நிலையத்தில் “ஏர் மல்டா” நிறுவனத்தின் விமானம்ஒன்று நேற்று முன்தினம் தரையிறங்க வந்தது.

ஆனால் தரையிறங்கும் கடைசி நேரத்தில் விமானி மீண்டும் அசுர வேகத்தில்விமானத்தை வானில் செலுத்தியுள்ளார். இதனால் பயணிகள் அனைவரும் மரண பயத்தில் உறைந்துபோயினர்.

அந்த விமானம் தரையிறங்கும் போது சில மீற்றர் தூரம் மட்டுமே இருந்தநிலையில் மற்றொரு விமானம் ஓடுபாதையில் இருந்ததை விமானிகள் கண்டறிந்தனர்.

இதனாலே மீண்டும் விமானத்தை வானில் செலுத்தி வட்டமிட்டனர். பின்னர்மீண்டும் 2வது முயற்சியில் பத்திரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

”ஏர் மல்டா” விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஏர் மல்டா விமானி சில பிரச்சனை காரணமாக விமான நிலையத்தை வட்டமிட்டார்.

பின்னர் விமானம் மீண்டும் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதுசாதாரண நடைமுறை தான், ஆனால் இது போன்ற பிஸியான விமான நிலையத்தில் இந்த நிகழ்வு சாதாரண விடயம் இல்லை.

பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என்றாலும் இது தொடர்பாக பயணிகளிடம் மன்னிப்பு கோரிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments