ஜேர்மனியில் நடைப்பெற்று வரும் G-20 மாநாட்டிற்கு எதிராக நிகழ்ந்த போராட்டத்தில் சுமார் 76 பொலிஸ் அதிகாரிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Hamburg நகரில் நேற்று மாநாடு தொடங்கியுள்ளது. மாநாட்டிற்கு எதிராக போராட்டம் நிகழ வாய்ப்புள்ளதால் சுமார் 20,000 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
எனினும், மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக சுமார் 12,000 பேர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டக்கார்களை ஒடுக்க பொலிசார் ஈடுப்பட்டபோது இருதரப்பினருக்கு இடையே அடிதடி ஏற்பட்டுள்ளது.
பொலிசாரை நோக்கி போராட்டக்காரர்கள் கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்களை வீசியுள்ளனர்.
இத்தாக்குதலில் 76 பொலிசாருக்கு காயம் ஏற்பட்டது. பொலிசாரின் வாகனங்களும் தீயிட்டு எரிக்கப்பட்டன.
மாநாட்டின் மூலம் உலகமயமாக்குதலை கண்டித்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷம் எழுப்பினர்.
போராட்டக்காரர்களை இரண்டு பிரிவுகளாக பிரித்ததால் கலவரம் ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்குள் வந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலை தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு பொலிசாரின் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.
இன்றும் நாளையும் நடைப்பெற உள்ள மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீனா ஜனாதிபதி ஸீ ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.