ஜேர்மனியிலிருந்து கத்தாருக்கு பறந்த மாடுகள்

Report Print Fathima Fathima in ஜேர்மனி
0Shares
0Shares
lankasri.com

கத்தாரின் பால் தேவையை பூர்த்தி செய்வதற்காக ஜேர்மனியிலிருந்து மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஈரானுடன் தொடர்பு வைத்துள்ளதாகவும் கத்தார் மீது குற்றம் சுமத்திய சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் விதித்த தடை ஐந்து வாரங்களுக்கு மேலாக நீடிக்கிறது.

இதனால் அன்றாட தேவைகளுக்காக பொருட்களை இறக்குமதி செய்யும் நிலையில் கத்தார் உள்ளது.

இந்நிலையில் ஜேர்மனியிலிருந்து நேற்று முன்தினம் ஹங்கேரி தலைநகர் வழியாக முதற்கட்டமாக 165 மாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

பவர் இன்டர்நேஷனல் என்ற நிறுவனத்தினால் இம்மாடுகள் வாங்கப்பட்டுள்ள நிலையில், நாட்டின் 30 சதவிகித தேவையை தீர்க்க முடியும் என நிறுவனத் தலைவர் முத்தஸ் அல் காயாத் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments