மெதுவாக அழிந்து வரும் ஜேர்மன் நகரம்: காரணம் என்ன?

Report Print Kabilan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியின் ஸ்டாஃபென் நகரம் மெதுவாக அழிந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டாஃபென் நகரத்தில் சுமார் 8,100 வீடுகள் உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கான வீடுகளில் தற்போது விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

இதற்கு காரணம், கடந்த 2007ஆம் ஆண்டு நிலத்தடி நீர் எடுக்க திட்டம் ஒன்றை, ஜேர்மனி அரசு கொண்டு வந்தது தான் என கூறப்படுகிறது.

இந்த திட்டத்தினால், தண்ணீர் அடுக்கும், அதற்குக் கீழே உள்ள ஜிப்சம் அடுக்கும் கலந்து மண்ணின் தன்மையை மாற்றிவிட்டதாக தெரிகிறது.

இந்நகரமானது, மென்மையான மண் அடுக்கின் மீது அமைந்துள்ளதால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 270 வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. நகரின் சில இடங்களில் கட்டிடங்கள் 62 செ.மீ உயரத்துக்கும் உயர்ந்தும், பக்கவாட்டில் 45 செ.மீ தூரத்துக்கு நகர்ந்தும் உள்ளன.

இங்கு உள்ள ஒவ்வொரு கட்டிடத்துக்கும் ஒவ்வொரு பிரச்சனை உள்ளதால், இவற்றைப் பழுது பார்ப்பதற்கு வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நகரில் வசிக்கும் பீட்டர் காஸ்பர் என்பவர் கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் திகிலுடனே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எப்போது வேண்டுமானாலும் கட்டிடம் இடிந்து விழலாம் அல்லது நிலத்துக்குள் புதையலாம்.

இயற்கை எழிலோடு மிக அழகான நகரமாக ஒரு காலத்தில் இருந்ததால் தான் இங்கு குடியேறினோம். ஆனால், நிலத்தடி நீரை உறிஞ்சும் இயந்திரங்கள் வந்த பிறகு, எங்களின் நிம்மதி பறிபோனது.

மெதுவாக இந்த நகரம் அழிந்து வருவதால், இங்கிருந்த சிலர் வேறு நகரங்களுக்கு சென்றுவிட்டனர். ஆனால், எல்லோரும் போக முடியாது. என்ன செய்வதென்று புரியவில்லை’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்