ஜேர்மன் தேர்தலில் அரசியல்வாதிகளின் அழகும் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்துள்ளது.
FDP தலைவரான Christian Lindner செப்டம்பர் ஃபெடரல் தேர்தலில் வெற்றிக் கனியைப் பறித்திருந்தார்.
2013 பாராளுமன்றத் தேர்தலில் மோசமான தோல்வியைச் சந்தித்தபிறகு, FDP கட்சி தனது இளம் தலைவரின் கவர்ச்சிகரமான கருப்பு வெள்ளை புகைப்படங்கள் அதிகம் இடம்பெற்ற பிரச்சாரங்களையே பெரிதும் நம்பி கடந்த தேர்தலில் 10.7 சதவிகிகிதம் வாக்குகளைப் பெற்றது.
Lindnerஇன் வெற்றியில் அவரது தோற்றத்திற்கு பெருமளவில் பங்கு இருப்பதை ஆய்வாளர்கள் சமீபத்தில் கண்டறிந்துள்ளனர்.
Viele Menschen haben die Politik des Auf-der-Stelle-Tretens in Deutschland genauso satt wie wir. CL #BPT17 pic.twitter.com/gVwEbRQFbO
— Christian Lindner (@c_lindner) 29 April 2017
சமூகவியலாளர் Ulrich Rosar மற்றும் அவரது ஆய்வுக் குழுவினர், சமீபத்தில் Düsseldorfஇல் தங்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒரு அரசியல்வாதியின் தோற்றத்திற்கும் அவருக்கு கிடைக்கும் வாக்குகளுக்கும் கணிசமான அளவில் தொடர்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் ஆய்வுக்காக Rosar 1786 அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தார். ஒரு நடுவரும் 24 ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு குழுவும் அவர்களுக்கு பூஜ்ஜியம்(கவர்ச்சியானவர் இல்லை) முதல் ஆறு(மிக கவர்ச்சியானவர்) வரை மதிப்பெண்கள் கொடுத்தார்கள்.
ஒரு வேட்பாளரின் பிரபல்யத்தன்மை மற்றும் புகழ் முதலிடத்தைப் பிடித்தாலும், அவரைத் தேர்ந்தெடுக்கும் முடிவை எடுப்பதற்கு அவர்களது அழகு இரண்டாவது முக்கிய காரணியாக இருப்பதை ஆய்வு முடிவுகள் காட்டின.
வேட்பாளரைத் தேர்ந்தெடுத்தல் பெரும்பாலும் குறைந்த நேரத்திலேயே முடிவெடுக்கப்படுகிறது. குழப்பமான அரசியல் பிரச்சினைகளைக் குறித்த திட்டமான மற்றும் நம்பகமான விவரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில், வேட்பாளர்களின் பதவிக்கு சற்றும் தேவையற்ற குணாதிசயங்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றன.
மக்கள் அழகையும் அறிவையும் குழப்பிக் கொள்கிறார்கள். கவர்ச்சியற்றவர்களைவிட அழகானவர்கள் அதிக நேர்மறைப் பண்புடையவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று Ulrich Rosar கூறுகிறார்.
ஆய்வில் பங்கு பெற்றவர்களின் எண்ணிக்கையைக் குறித்த கேள்வி எழுந்தபோது, Ulrich Rosarஇன் சக எழுத்தாளரான Sabrina Schottle, குறைந்த நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளும் இத்தகைய முடிவுகளையே கொடுப்பதிலிருந்து கவர்ச்சியைக் குறித்து ஒத்த கருத்தே காணப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.