ஜேர்மனி ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கமாக இருந்தது: நிச்சயம் இனி இல்லை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
256Shares
256Shares
lankasrimarket.com

ஜேர்மனி ஒரு காலத்தில் அகதிகளின் சொர்க்கமாக இருந்தது, 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட அகதிகள் பிரச்சினை துவங்கி ஜேர்மன் சேன்ஸலரான எஞ்சலா மெர்க்கல் அகதிகளுக்கு தனது எல்லையை அகலத் திறந்து விட்டார்.

ஆனால் தற்போது அவரது பதவியே ஆட்டம் கண்டு விட்ட நிலையில் வேறு வழியே இன்றி அவர் எடுத்துள்ள முடிவு அகதிகள் நாட்டுக்குள் நுழைவதை கடினமாக்கியுள்ளது.

அகதிகளுக்கு எப்போதும் ஆதரவு அளிக்கும் கொள்கையுடைய ஐரோப்பிய நாடுகளில் முக்கியமான நாடாகத் திகழ்ந்த ஜேர்மனியின் தலைவரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு அவரது கூட்டணியிலிருந்தே பிரச்சினை கிளம்பியது.

அவரது முக்கியமான கூட்டணிக் கட்சியான CSUவைச் சேர்ந்த உள்துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் Horst Seehofer, ஆரம்பம் முதலே ஏஞ்சலாவின் அகதிகள் கொள்கையை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அகதிகள் பிரச்சினை தொடர்பாக ஒரு நல்ல முடிவை எடுக்கா விட்டால் மூன்று நாட்களுக்குள் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்தார் அவர்.

இறுதியாக கூட்டணி உடையும் நிலை ஏற்பட்ட பிறகு பல மணி நேர விவாதங்கள் நடைபெற்ற நிலையில் வேறு வழியின்றி ஜேர்மனிக்கு அகதிகள் வருவதை கட்டுப்படுத்த சம்மதம் தெரிவித்தார் ஏஞ்சலா.

இதனால் அகதிகளுக்கு ஒரு சொர்க்கம்போல விளங்கிய புகலிட பூமியாகிய ஜேர்மனி இனி அவ்வாறு அழைக்கப்படப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்