தலையில் பூ வைப்பதால் இவ்வளவு ஆரோக்கியமா?

Report Print Kavitha in ஆரோக்கியம்
0Shares
0Shares
Cineulagam.com

மரம், செடி, கொடி, புல் முதலான நிலத்திணைகளில் காணப்படும் ஓர் உறுப்பு. இது பல்வேறு நிறங்களிலும், பல்வேறு மணங்கள் பரப்புவனவாகவும், தன் இனத்தைப் பரப்ப, காயாகிப் பழமாகி விதைகள் உருவாக்கும் முன் சூல்கொள்ளும் உறுப்பு பூ ஆகும்.

எல்லா பெண்களுக்குமே தலையில் பூ வைப்பது என்றாலே மிகவும் பிடித்தவொரு விடயமாகும். நாம் பூவை அழகிற்காக தலையில் வைக்கின்றோம் ஆனால் அதில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் எவருமே அறிந்திராத ஒன்றாக காணப்படுகின்றது.

தலையில் பூ வைப்பது அவசியம்
 • மனமாற்றத்துக்கு உதவும்.
 • ஒரு விஷயத்தைப் பல கோணங்களில் பார்க்கும் தன்மையைக் கொடுக்கும்.
 • மனஅழுத்தத்தால் ஏற்படும் செல் இழப்பைத் தடுக்கிறது.
 • பூவின் மணமானது உடல் செல்களுக்குப் புத்துணர்வை அளிக்கிறது.
 • மனமாற்றத்துக்கு உதவுகிறது.
 • மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
 • மகிழ்ச்சியை உண்டாக்குகிறது.
தலையில் வைக்கப்படும் பூக்களின் பயன்கள்


ரோஜாப்பூ
 • தலைச்சுற்றல், கண் நோய் போன்றவற்றைக் குணப்படுத்தும்.
மல்லிகைப்பூ
 • மனஅமைதிக்கு உதவும். கண்களுக்குக் குளிர்ச்சி தரும்.
செண்பகப்பூ
 • வாதத்தைக் குணப்படுத்தும். பார்வைத் திறனை மேம்படுத்தும்.
பாதிரிப்பூ
 • காது கோளாறுகளைக் குணப்படுத்தும். செரிமானச் சக்தியை மேம்படுத்தும். காய்ச்சல், கண் எரிச்சல் போன்றவற்றைச் சரிசெய்யும்.
செம்பருத்திப் பூ
 • தலைமுடி தொடர்பான பிரச்னைகளை சரிசெய்யும். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.
மகிழம்பூ
 • தலை சம்பந்தப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலி, பல் சொத்தை உள்ளிட்ட பல் குறைபாடுகளை நீக்கும்.
வில்வப்பூ
 • சுவாசத்தைச் சீராக்கும். காச நோயைக் குணப்படுத்தும்
சித்தகத்திப்பூ
 • தலை வலியைக் குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ
 • நறுமணம் வீசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும். உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ
 • தலை எரிச்சல், தலை சுற்றல் போன்றவற்றைச் சரிசெய்யும். மனஉளைச்சலை நீக்கி மனஅமைதிக்கு வழிவகுக்கும். தூக்கமின்மையை நீக்கி, சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம்பூ
 • தலை வலி மற்றும் தலை பாரத்தைச் சரிசெய்யும்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்