நியூயோர்க் அருங்காட்சியத்தில் கண்ணை கவரும் இந்து கடவுள்களின் ஓவியம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
நியூயோர்க் அருங்காட்சியத்தில் கண்ணை கவரும் இந்து கடவுள்களின் ஓவியம்
0Shares
0Shares
lankasri.com

உலகின் மிகப்பெரிய அருங்காட்சியங்களில் ஒன்று மெட்ரோபாலிடன் அருங்காட்சியகம்.

இந்த அருங்காட்சியத்தில், தெய்வீக இன்பம் என்ற தலைப்பில், 14 ஆம் திகதி முதல் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதில், கடவுளர்களின் ஓவியங்கள் இடம் பெறவுள்ளன.

16ம் நூற்றாண்டு முதல் 19ம் நூற்றாண்டு வரை ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அரசர்களின் அரசவையை அலங்கரித்த 100க்கும் மேற்பட்ட ஓவியங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெறும். கண்களையும் ஆத்மாவையும் மகிழச் செய்யும் இந்த ஓவியங்களில் காணப்படும் காட்சிகள். பார்ப்பவர் மனதை மயக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

ராமரின் காலில் குத்திய முள்ளை நீக்குதல், கிருஷ்ணரும் கோபியர்களும் மழைக்கு ஒதுங்கி நிற்றல், சிவனும் பார்வதியும் தாயம் விளையாடுதல், கிருஷ்ணர் கோவர்த்தன கிரியைத் தூக்கிப் பிடித்தல், ராமரின் திருமணத்திற்கு தசரதன் செல்லல்,

ராட்சத ஒற்றர்களை ராமர் மன்னித்தல், கடவுளர்களால் வழிபடப்படும் தேவி பத்ரகாளி, பரத்வாஜ் குடிலில் ராமர், சீதா, லட்சுமணன், கிருஷ்ணரைக் கெஞ்சும் கோபியர், சிவனுடன் தேவி பைரவி, தசரதனின் மரணம், யமுனை நதியை கோபியர் கடக்க துர்வாச முனிவர் உதவுதல், கிருஷ்ணரும் ராதையும் போன்ற பல ஓவியங்கள் இதில் இடம் பெற உள்ளன.

காகிதத்தில் வரையப்பட்ட இந்த வண்ண ஓவியங்களில் தங்கம் மற்றும் வெள்ளி வேலைப்பாடுகளும் உள்ளன. இங்கு வைக்கப்பட உள்ள பல ஓவியங்கள் இதுவரை எந்த கண்காட்சியிலும் இடம் பெறாதவை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments