நாளை நான் போராட்டம் நடத்துகிறேன்.. முடிந்தால் கைது பண்ணுங்கள்: நடிகர் சிம்பு ஆவேசம்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வலியுறுத்தி பல்வேறு கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்களும் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகரான சிம்பு ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து ஆவேசமாக பேசியுள்ளார். அதில், தமிழை தாய்மொழியாக கொண்டதில் பெருமை அடைகிறேன்.

தமிழில் ஐந்தாம் வகுப்பு வரை 99 மதிப்பெண்கள் எடுத்தேன். நான் முதலில் தமிழன், பிறகுதான் இந்தியன். தமிழர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னை இருக்கிறது. இதுவரை வெளியில் அடித்தீர்கள்.

இப்போது என் வீட்டுக்குள்ளேயே வந்து எனது கலாச்சாரத்தின் மீது கை வைத்து அடிக்கிறீர்கள். இதை பொறுத்துக்கொள்ள முடியுமா.

ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி எழுப்ப வெளிநாட்டு அமைப்புக்கு (பீட்டா) என்ன தகுதி இருக்கிறது. மாடுகளை துன்புறுத்தி கறக்கப்படும் பாலை குடித்தவர்களே காளை பற்றி பேசுகிறார்கள். தமிழர்கள் அனாதைகள் அல்ல, கேட்பதற்கு யாரும் இல்லை என நினைத்தார்களா.

கலாச்சார போட்டியான ஜல்லிக்கட்டு குறித்து கேள்வி கேட்க பீட்டா அமைப்பு யார். இதுவரை வெளியில் அடித்த நீங்கள், எங்கள் வீட்டில், எங்கள் கலாசாரத்தில் வந்து கை வைக்கிறீர்கள். தன்மானம், இனம் மீது உணர்வு இருப்பதால்தான் தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி நீர் தர மறுக்கிறது.

அரசியல் கட்சி, திரைப்படத்துக்காகவா போராடினார்கள். தமிழ் கலாசாரத்துக்கு போராடியவர்கள் மீது பொலிசார் தடியடி நடத்தியது ஏன். தனித்தனியாக போராட்டம் நடத்துவதால் தான் பொலிசார் தாக்குதல் நடத்துகிறார்கள். ஜல்லிக்கட்டுக்காக போராடும் தமிழக மாணவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன்.

தமிழர்கள் அனாதையா, கேட்க ஆளில்லை என நினைத்து விட்டீர்களா. தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் பிளவுபட்டு கிடக்கின்றனர். ஒற்றுமையில்லை. அனைவரும் தனித்தனியாக போராடுவதால், எந்த பயனும் ஏற்படப்போவதில்லை.

எனது வீடு முன்பு நாளை 10 நிமிடம் மவுனப் போராட்டம் நடைபெறும். அனைவரும் தங்கள் வீட்டு முன்பு மவுனப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான தனது குரலுக்கு தமிழர்கள் ஆதரவு தர வேண்டும்' எனக் கூறினார். மேலும் தான் போராட்டம் நடத்தும் போது என்னை முடிந்தால் அவர்கள் கைது செய்யட்டும், முடிந்தால் தடியடி நடத்தி கூட கலையுங்கள் என கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments