International
Notification
Notification
Submit Cancel

சர்பிரைஸ் கொடுப்பதாகக் கூறி மனைவியை கொலை செய்த கணவன்

Topics :
advertisement

மனைவிக்கு சர்பிரைஸ் கொடுப்பதாகக் கூறி அவரை கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

டெல்லியில் உள்ள குர்கானில் வசித்து வருபவர் மனோஜ் (24). இவருக்கும், கோமல் (22) என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 6 மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக கோமல் கணவனை விட்டு பிரிந்து ரகுபிர் நகரில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

கோமல் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து தன்னுடன் வரும்படி அழைத்த மனோஜின் கோரிக்கையை அவர் நிராகரித்தார். ஆத்திரமடைந்த மனோஜ் தனது மனைவியை கொல்ல செய்ய திட்டமிட்டுள்ளார்

இதைத் தொடர்ந்து, தனது திட்டத்தின்படி சர்பிரைஸ் கொடுப்பதாகக் கூறி போன்ட்டா பார்க்கிற்கு கோமலை அழைத்து சென்றுள்ளார். அங்கு சென்ற பின், கோமலின் கண்களை மூடும்படி கூறியுள்ளார்.

பின்னர், அவர் வாங்கி வந்த கயிற்றால் மனைவியின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளார். பின் அங்கேயே தள்ளிவிட்டு ஊரை விட்டு தப்பி செல்ல முயன்றார் மனோஜ்.

இதையறிந்த மனோஜின் நண்பர் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். மனோஜ்யை கைது செய்த பொலிசார், அவரது மனைவியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement