கடற்கரையில் ஒதுங்கிய இளம்பெண்ணின் சடலம்: கற்பழித்து கொலை?

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

மராட்டிய மாநிலம் மும்பையில் உள்ள ஜுஹு கடற்கரையில் காயங்களுடன் இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலத்தைக் கண்டு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மும்பையின் முக்கிய பகுதியான ஜுஹு கடற்கரையில் இன்று காலை தலை மற்றும் முதுகில் பலத்த காயங்களுடன் கிடந்த சுமார் இருபது வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணின் சடலத்தைக் கண்டு அங்கு நடைபயிற்சிக்கு வந்தவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து கொலை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து அருகாமையில் உள்ள கண்காணிப்பு கமெரா பதிவுகளை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

முகம் மற்றும் உடம்பில் காயங்கள் உள்ளதால் குறித்த இளம்பெண்ணை கற்பழித்து கொலை செய்திருக்கலாம் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இருப்பினும் உடற்கூறு சோதனை முடிவுகள் வெளிவந்த பின்னரே உறுதி செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளம்பெண் மாயமானது தொடர்பில் இதுவரை எந்த புகாரும் பதியப்படாததை அடுத்து, அது தொடர்பிலும் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்