எங்கள் வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யா யாரையும் திருமணம் செய்யவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தமிழ் சேனல் ஒன்று ஆர்யாவை வைத்து எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதில் கலந்து கொண்ட 16 பெண்களில் ஆர்யாவிற்கு யாரை பிடிக்கிறதோ அந்த பெண்ணையே ஆர்யா நிகழ்ச்சியின் இறுதியில் திருமணம் செய்வார் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் தொடர்ந்து நடந்து வந்த இந்த நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இறுதியாக அகாத, சுசானா, சீதாலட்சுமி போன்ற பெண்கள் இருந்தனர்.
தற்போது அபர்ணதியின் தங்கை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன் அக்கா அபர்ணதியவையே ஆர்யாவிற்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின் ஆர்யா யாரையும் திருமணம் செய்யவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை பதிவேற்றம் செய்திருந்த அவர், பதிவேற்றம் செய்த சில நிமிடங்களிலே நீக்கவிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என்பது நாளைய நிகழ்ச்சியில் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.