கமல்ஹாசன் பற்றிய உண்மையை உடைத்த காயத்ரி ரகுராம்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

கமல்ஹாசன் தற்போது அரசியல்வாதியாகிவிட்டதால் பிக்பாஸ் 2 - வில் அரசியல் குறித்து அவர் அதிகம் பேசுவார் என காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்

பிக்பாஸ் 2 விரைவில் தொடங்கவிருக்கின்ற நிலையில் பிக்பாஸ் 1 - இல் போட்டியாளராக கலந்துகொண்ட காயத்ரி ரகுராம் அதுகுறித்து தற்போது பேசியுள்ளார்.

பார்வையாளராக அந்த நிகழ்ச்சியைப் பார்க்க நானும் ஆவலாக இருக்கேன். போன வருஷம் என்னை வெச்சு செஞ்சாங்க. இந்த முறை யாரையெல்லாம் செய்யப்போறாங்கன்னு தெரியலை, பொறுத்திருந்து பார்ப்போம் என கூறியுள்ளார்.

மேலும், சீசன் 1-ல் நான் வெளியே வரும்போது, எனக்குப் பக்கபலமா இருப்பேன்னு கமல் சார் வாக்குறுதி கொடுத்தார். என்னைப்போல பல போட்டியாளர்களுக்கு அன்பான வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் சொன்னார்.

அதில் எதையுமே அவர் செய்யலை. அந்த நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு எங்களைக் கூப்பிட்டுப் பேசவேயில்லை. அந்த நிகழ்ச்சியால் நிறைய பேர் மனரீதியாக பாதிக்கப்பட்டாங்க. அவங்களுக்காகவும் அவர் எதுவும் செய்யலை.

சொன்னதுபோல அவர் நடந்துக்கணும்னு நான் எதிர்பார்க்கவும் இல்லை. இப்பவோ அரசியல்வாதியாகவும் ஆகிட்டார். அதனால், நிச்சயம் அரசியல் பேச்சுகள் அதிகம் இருக்கும்.

போட்டியாளர்களும், பார்வையாளர்களுடன் தான் பலியாடுகள் என கூறியுள்ளார், மேலும் இதனை நான் எனது அனுபவத்தில் சொல்கிறேன் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்