ஆப்பிரிக்காவில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் ஒபாமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள Cape Verde என்ற நாட்டில் சுற்றுலா வழிகாட்டியாக பணி செய்து வரும் நபர் அச்சு அசலாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி சாயலில் இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Cape Verde நாட்டில் சுற்றுலா வழிகாட்டியாக இருந்து வரும் 43 வயதான Jose Oliveira முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா போன்று சாயலில் இருப்பதால், அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டி வருவதாக அவர் கூறியுள்ளார்.

advertisement

மட்டுமின்றி இவரையும் அங்குள்ள மக்கள் திருவாளர் ஒபாமா என்றே அழைப்பதாகவும் கூறும் இவர், ஒபாமா ஜனாதிபதியாக பொறுப்பேற்று உலகெங்கும் அறியப்பட்டதன் பின்னர், அவரைப் போன்று அச்சு அசலாக இருக்கும் தம்மையும் மக்கள் கூர்ந்து கவனிக்க தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சிலர் ஒபாமாவின் சகோதரரா எனவும் கேள்வி எழுப்பியதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக மக்கள் புகைப்படம் எடுப்பதும் விசாரிப்பதுமாக தினசரி இது வாடிக்கையாக நடைபெற்று வருவதாகவும் ஜோஸ் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments