தானாக நகர்ந்த நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம்: ஊழியர் செய்த செயல்! வைரல் வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் தானாக நகர தொடங்கிய நிலையில் ஊழியர் ஒருவர் முன் சக்கரத்தை முட்டுக் கொடுத்து விமானத்தை சாமர்த்தியமாக நிறுத்தியுள்ளார்.

சீனாவின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற மங்கோலியாவில் விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது.

இந்த விமான நிலையத்தில் விமானம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது திடீரென அந்த விமானம் பின்நோக்கி நகர தொடங்கியது.

இதை கவனித்த அங்கிருந்த ஊழியர், விமானம் கிளம்ப தயாராக இருப்பதாக முதலில் நினைத்துள்ளார்.

பின்னர், சப்தம் எதுவும் இல்லாமல் விமானம் நகர்வதை பார்த்து விபரீதம் நடப்பதை உணர்ந்த ஊழியர் உடனடியாக விமானம் அருகில் ஓடினார்.

அதன் பிறகு விமானத்தின் முன் சக்கரத்தில் முட்டுக் கொடுக்கும் பொருளை வைத்து விமானத்தை ஊழியர் சாதுர்யமாக நிறுத்தினார்.

விமானத்தின் உள்ளே யாரும் இல்லை என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் காட்சிகளை அருகிலிருக்கும் விமானத்தில் உள்ள ஒரு நபர் வீடியோவாக பதிவு செய்து தற்போது வெளியிட்டுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments