பிரிவினை போதும்: வடகொரியாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தென்கொரியா

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வடகொரியாவின் கண்டம் விட்டு தாக்கும் ஏவுணை சோதனைக்கு பின்னர் எழுந்த பரபரப்பு அடங்கிய நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளது தென்கொரியா.

தென்கொரியத் தலைநகர் சியோலில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு பாதுகாப்புத்துறை இணையமைச்சர் சு சோ சுக், வரும் 21 ஆம் திகதி வடகொரியாவில் பன்முன்ஜோம் பகுதியில் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கொரிய போர் முடிவடைந்த 63வது நினைவு தினம் அனுசரிக்கப்படும் வரும் 27 ஆம் திகதி எல்லையில் எதிர்ப்பு செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று தென்கொரியா கேட்டுக் கொண்டுள்ளது.

அதேபோல் பிரிந்த குடும்பங்கள் ஒருங்கிணைவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கும் தென்கொரி‌யா அழைப்பு விடுத்துள்ளது. தென்கொரிய ஜனாதிபதியாக பதவியேற்ற மூன் ஜே இன் பேச்சுவார்த்தை மூலம் வடகொரியாவுடனான பதற்றத்தை குறைக்க விருப்பம் தெரிவித்து வருவதால், இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த அழைப்புக்கு இதுவரை வடகொரியாவிடம் இருந்து எந்தவித பதிலும் வெளியாகவில்லை என தெரிய வந்துள்ளது. இருப்பினும் வடகொரியாவிடம் இருந்து சாதகமான ஒரு பதிலையே எதிர்பார்ப்பதாக தென்கொரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கடைசியாக 2015 டிசம்பர் மாதம் தான் இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத சோதனை, ஏவுகணை சோதனை ஆகியவற்றை வடகொரியா தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

வடகொரியாவிற்கு சவால் விடும் வகையில் தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து ராணுவ பயிற்சியும் மேற்கொண்டு வருகின்றன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments