டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் பயங்கரவாதி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

உலக அரங்கில் White Widow என அறியப்பட்ட பிரித்தானியாவின் பெண் ஐ.எஸ் பயங்கரவாதி சிரியாவில் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியா மற்றும் ஈராக் எல்லைப்பகுதியில் பதுங்கியிருந்த சாலி ஜோன்ஸ் என்ற பிரித்தானிய பெண் ஐ.எஸ் பயங்கரவாதி தான் அமெரிக்க விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

பிரித்தானியாவின் கென்ட் பகுதியில் குடியிருந்து வந்த சாலி ஜோன்ஸ் கடந்த 2013 ஆம் ஆண்டு தமது கணவர் Junaid Hussain மற்றும் ஒரு குழந்தையுடன் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணையும் பொருட்டு சிரியா சென்றனர்.

இதில் அமெரிக்க டிரோன் தாக்குதலில் கடந்த 2015 ஆம் ஆண்டு Junaid Hussain கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனிடையே அமெரிக்க கூட்டுப்படைகளின் தொடர் தாக்குதல் காரணமாக ஐ,எஸ் அமைப்பின் பல தலைவர்களும் கொல்லப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு துவக்கத்தில் சாலி சிரியா விட்டு பிரித்தானியா திரும்ப வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அரசாங்கம் தரும் எந்த தண்டனையையும் தாம் பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் கடந்த யூன் மாதம் அமெரிக்க ராணுவத்தின் டிரோன் தாக்குதலில் சாலி கொல்லப்பட்டுள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சாலியுடன் அவரது மகனும் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. ஆனால் சிறுவன் குறித்து தகவல் எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்