போதை மருந்துக்கு அடிமையான ஒரு மில்லியன் பெண்கள்: எந்த நாட்டில் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

ஆப்கானிஸ்தானில் 1 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் போதைப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளதாக அந்நாட்டு பொது சுகாதார அமைச்சகம் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் வெளியான அறிக்கையில், நாட்டில் போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

மேலும் 1 லட்சம் குழந்தைகளும் போதைக்கு அடிமையாகி உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க 20 போதை மீட்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காபுலில் நடைபெற்ற விழாவில், கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவின் தலைவர் ஷாக்பூர் யூசுப், 'போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

போதைப்பொருளுக்கு அடிமையான குழந்தைகளில் அனைவரும் 10 வயதிற்கு கீழ் உள்ளவர்கள். பெண்கள் பொதுவாக தங்கள் கணவன் மது அருந்துவதை பார்த்து அவர்களும் போதைக்கு அடிமையாகின்றனர்.

இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளித்து போதைப்பொருள் பழக்கத்திலிருந்து மீட்க வேண்டும்' என கூறினார்.

இதுகுறித்து பேசிய மார்வா முசாவி என்ற பெண், 'நான் என் கணவரை பார்த்து மது அருந்த பழகினேன். எங்களை மீட்பு முகாம்களில் வைத்து சிகிச்சை அளித்தால் மட்டும் பிரச்சனை தீராது. முகாமை விட்டு வெளியே சென்றவுடன் மீண்டும் போதைப்பொருளை பயன்படுத்த தொடங்குவோம்.

அதனால் போதைப்பொருளை விற்பனை செய்பவர்களை தடுக்க வேண்டும். அப்போது தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்' என கூறினார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்