உலகின் முதல் ஹீரோ

Report Print Deepthi Deepthi in உறவுமுறை
0Shares
0Shares
Cineulagam.com

தந்தைக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாள் எப்படி வந்தது?

அமெரிக்காவில் 1909ல் 'சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்' என்ற இளம் பெண், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.

அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என வலியுறுத்தினார். இவர் தனது தாயாரின் மறைவுக்கு பிறகு தந்தை வில்லியம் ஆறு குழந்தைகள் கொண்ட குடும்பத்தை கடுமையான சிரமங்களுக்கிடையே பராமரிப்பதை கண்டார்.

இது தான் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தை இவருக்கு துாண்டியது.

இதன்படி 1910ல் அமெரிக்காவில் முதன்முதலில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. 1966ல் அங்கீகரிக்கப்பட்டது.

1972ல் அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனால், அந்நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. சில நாடுகளில் வெவ்வேறு தினங்களில் கடைபிடிக்கப்பட்டாலும், பெரும்பாலான நாடுகளில் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

உலகின் முதல் ஹீரோ

தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணீர், சந்தோஷம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக்கொள்பவர் தந்தை.

'அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்' என்ற பாடல்வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.

குழந்தையின் ஆரோக்கியம் மீது தாய் கவனம் செலுத்துவது போல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை.

குறிப்பாக பெண் பிள்ளைகள் அதிகம் பாசம் வைத்திருப்பது தங்கள்தந்தையின் மீதுதான், ஆண் பிள்ளைகளை தந்தையர்கள் என்னதான் கண்டிப்போடு வளர்த்தாலும்அவர்களின் வாழ்வில் முதல் ஹீரோ யார் என்றார்தந்தை தான்.

அந்த அளவுக்கு, தனது குழந்தைகளுக்கென நேரம் ஒதுக்கி, அவர்களுக்கு நல்லொழுக்கங்களை கற்றுத்தந்து இந்த சமுதாயத்தில் ஒரு பொறுப்புள்ள குடிமகனாக மாற்றுகிறார்.

மேலும் உறவுமுறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments