நிலாவில் நீர் இல்லை: அதிர்ச்சி தகவலை வெளியிட்ட செயற்கைகோள் புகைப்படங்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasri.com
advertisement

பூமியின் துணைக்கிரகமான நிலாவில் நீர் இருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் இதுதொடர்பில் 1972 ஆம் ஆண்டிற்கு பின்னர் மீண்டும் விஞ்ஞானிகள் தற்போது மீள் பகுப்பாய்வு செய்தனர்.

advertisement

இதன்போது செயற்கைகோளிலிருந்து பெறப்பட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது அங்கு நீர் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் தென்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த James Day என்பவரது தலைமையிலான புவியியலாளர் குழு ஒன்றே இந்த ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

NASA

இதன்போது Apollo 16 இலிருந்து பெறப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் மீள் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் 66095 அல்லது Rusty Rock என அறியப்படும் கற்பாறை தொடர்பிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப் பாறையானது Apollo 16 திட்டத்தின்போது தரையிறங்கிய பகுதி ஆகும். நிலாவின் மேற்பரப்பானது நாம் எண்ணியதைப் போல் அல்லாது வறட்சியாக காணப்படுவது 45 வருடங்கள் கழித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது..

NASA

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்