முஸ்லிம் சிறுமிகள் சிறுவர்களுடன் நீந்த வேண்டும்: நீதிமன்றம் அதிரடி

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com
advertisement

சுவிஸில் இருபாலாருக்குமான நீச்சல் குளத்தில் குழந்தைகளை நீச்சல் படிக்க அனுப்ப மறுத்த பெற்றோர்களுக்கு ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

துருக்கியை பாரம்பரியமாக கொண்ட சுவிட்சர்லாந்து பெற்றோர்கள், basel நகரில், கட்டாய பொது நீச்சல் பாடத்துக்கு தங்களது பெண்களை அனுப்ப மறுத்துள்ளனர்.

advertisement

கடமையை மீறிய பெற்றோர்களுக்கு ஒரு குழந்தைக்கு 700 பிராங்க் என இரண்டு குழந்தைக்கு 1400 பிராங்க் என சுவிஸ் கல்வி அதிகாரிகள் அபராதமாக விதித்துள்ளனர்.

இதை எதிர்த்து பெற்றோர்கள் ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், சுவிட்சர்லாந்துக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ளது. மேலும், பெற்றோர்களுக்கான அபராதத்தை உறுதிசெய்துள்ளது.

சுவிஸ் பொது பள்ளி பாடத்திட்டம் மற்றும் சமூகத்தில் குழந்தைகள் வெற்றிகரமாக ஒன்று கூடுதல் ஆகியவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்துவதால் அதிகாரிகள் அதை நியாயப்படுத்தியுள்ளனர் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், பெற்றோர்கள் இந்த நடவடிக்கைகள் சிந்தனை, மனம் மற்றும் மத சுதந்திரம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐரோப்பிய மனித உரிமைகளின் மாநாட்டின் ஒன்பதாம் சட்டப்பிரிவை மீறுவதாக உள்ளது என வாதிட்டுள்ளனர்.

பொது நீச்சல் குளங்களிலிருந்து தங்கள் பெண் பிள்ளைகளை விலக்கி வைக்கும் பெற்றோர்களின் எண்ணத்தைக் காட்டிலும் உள்ளூர் பழக்கம் மற்றும் நெறிகளுக்கு ஏற்றவாறு வெற்றிகரமான சமூக ஒற்றுமைக்கு வழிவகுக்கும் முழு நீள கல்வியில் குழந்தைகளுக்கு உள்ள ஆர்வமே முக்கியம் என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments