தண்டவாளம் மீது வாலிபர்கள் நடத்திய சாகசம்: நிகழ்ந்த விபரீத சம்பவம்

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் தண்டவாளம் மீது நின்று ரயில் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக செயல்பட்ட வாலிபர்கள் சிலரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் வசிக்கும் சில வாலிபர்கள் நேற்று தண்டவாளத்திற்கு அருகில் நடந்துச் சென்றுள்ளனர்.

அப்போது, தண்டவாளத்தில் ரயில் வந்துக்கொண்டு இருந்ததால் தடுப்புக் கம்பியை ஊழியர்கள் போட்டுள்ளனர்.

ஆனால், தடுப்புக் கம்பியை தாண்டி வாலிபர்கள் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளனர்.

வாலிபர்களில் இரண்டு பேர் திடீரென தண்டவாளம் மீது நகராமல் நின்றுக்கொண்டு இருந்துள்ளனர்.

ரயில் மிக அருகில் வந்த அடுத்த வினாடி தண்டவாளத்தில் இருந்து வேகமாக விலகி ஓடியுள்ளனர்.

வாலிபர்கள் மத்தியில் ஒரு சாகச செயலாக இதனை செய்துள்ளனர்.

வாலிபர்களின் இச்செயல் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

இதுக் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘வாலிபர்களின் செயல் ரயில் போக்குவரத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

சில வினாடிகள் தாமதம் செய்திருந்தால் இரண்டு வாலிபர்கள் மீதும் ரயில் மோதியிருக்கும்.

பொதுவாக, மணிக்கு 60 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு ரயிலை நிறுத்த வேண்டும் என்றால் 200 மீற்றர்களுக்கு முன்னதாக பிரேக் போட வேண்டும்.

இந்த இடைவெளியை ரயில் கடந்து விட்டால் எதிரே உள்ள ஆபத்தை எதிர்க்கொண்டு தான் ஆக வேண்டும்.

எனவே, வாலிபர்கள் இந்த 200 மீற்றர் தொலைவிற்குள் தான் இந்த சாகச செயலை செய்துள்ளனர். இது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தண்டவாளத்தில் அத்துமீறி செயல்பட்ட வாலிபர்களை தீவிரமாக தேடி வருவதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் 10,000 பிராங்க் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments