சிறந்த நாடுகள் பட்டியலில் இடம்பிடித்த சுவிஸ்

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
Cineulagam.com

வெளிநாட்டினர் குடியேறுவதற்கு சிறந்த நாடாக தரவரிசை பட்டியலில் சுவிற்சர்லாந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்காவின் செய்திகள் மற்றும் உலக அறிக்கை நிறுவனம் உலக நாடுகள் குறித்து தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், ஒட்டு மொத்தமாக சிறந்த நாடுகள் பட்டியலில் சுவிற்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.

வெளிநாட்டு மக்கள் குடியேறுவதற்கான பட்டியலில் சுவிற்சர்லாந்து மூன்றாம் இடம் பிடித்துள்ளது.

முதல் இரண்டு இடங்களில் சுவீடன் மற்றும் கனடா நாடுகள் உள்ளன. நிலையான பொருளாதாரம், சிறந்த வேலைவாய்ப்பு, வருமானம் போன்ற விடயங்களில் மக்களின் கருத்துகளை கேட்டறிந்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சுவிஸில் தற்போது 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வெளிநாடுகளிலிருந்து குடியேறி அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

இது அந்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் கால் பகுதியாகும். அதிக சம்பளங்களை வழங்கும் பல பன்னாட்டு நிறுவனங்கள், சிறந்த வாழ்க்கை தரம் போன்றவைகளால் வெளிநாட்டினர் சுவிஸால் ஈர்க்கப்படுகிறார்கள்.

பலமான நாணய மதிப்பும், வேலையில்லா திண்டாட்ட பிரச்சனை குறைவாக இருப்பதும் சுவிஸ் மக்களை ஈர்க்க காரணமாகும்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments