சுவிஸில் சட்டப்பூர்வமாக விற்பனைக்கு வரும் கஞ்சா சிகரெட்டுகள்

Report Print Basu in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasri.com

சுவிஸில் தனியார் சிகரெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்று முதன்முறையாக சட்டப்பூர்வமாக தயாரிக்கப்பட்ட கஞ்சா சிகரெட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

St Gallen-ன் மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் Heimat என்ற நிறுவனமே கஞ்சா சிகரெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

2011 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் ஒரு சதவீத Tetrahydrocannabinol (THC) வரையிலான கஞ்சா சட்டப்பூர்வமாக்கப்பட்டது. இது பல ஐரோப்பிய நாடுகளில் 0.2 சதவிகித சட்ட வரம்பை விட அதிகமானது.

இந்த சட்டப்பூர்வமாக்கப்பட்ட சுவிஸ் கஞ்சாவில் போதை குறைவானது, ஆனால் அதில் Cannabidiol (CBD), கொண்டிருப்பதால் வலி, வீக்கம் மற்றும் திடீர் அடைப்பிற்கு சிகிச்சையளிப்பதற்கு சில ஆரோக்கியமான நன்மைகள் கொண்டுள்ளது.

Heimat அளித்துள்ள தகவலின் படி, குறித்த சிகரெட் சட்டப்பூர்வமான Tetrahydrocannabinol (THC) அளவு கொண்டுள்ளது. ஆனால், அதில் Cannabidiol (CBD) அளவு அதிகளவில் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சிகரெட் ஒரு பாக்கெட் 19.90 பிராங்குகள் விற்கப்படும். இந்த மாத இறுதியில் சிகரெட் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சுவிஸை தவிர்த்து வேறு நாட்டில் இந்த சிகரெட்டை பயன்படுத்த Heimat நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments