2018 உலகக்கோப்பை முதல் அறிமுகமாகும் புதிய திட்டம்: சர்வதேச கால்பந்து சங்கம் அறிவிப்பு

Report Print Harishan in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் நேர்மையை நிலைநாட்டும் வகையில் வீடியோ ரீப்ளே முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் வருகின்ற ஜூன் 14 முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் தொடங்கவுள்ளது.

இதற்காக முன் ஏற்பாடுகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்த உள்ளதாக சர்வதேச கால்பந்து சங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சர்வதேச கால்பந்து சங்கம்(IFAB), வருகின்ற உலகக் கோப்பை போட்டி முதல் வீடியோ ரீப்ளே முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

VAR(Video Assistant Referee) எனப்படும் இந்த புதிய திட்டம் மூலம் கோல்ஸ், பெனால்டிஸ், நேரடி ரெட் கார்ட், மற்றும் தவறுகளை அப்பீல் செய்து உடனடியாக சரியான தீர்ப்பை நடுவரிடம் இருந்து பெற முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த திட்டத்தை “கால்பந்து விளையாட்டில் நீதியை நிலைநாட்டும் ஒரு வரலாற்று திட்டம்” என்று புகழ்ந்துள்ளது IFAB நிர்வாகம்.

இந்த புதிய திட்டம் கடந்த 2016 முதல் FIFA அமைப்பின் தலைவராக செயல்பட்டு வரும் Gianni Infantino-வின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாகும்.

மேலும், குறித்த திட்டம் வரும் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் போட்டியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்