தற்போது நான் உயிருடனே இருந்திருக்க மாட்டேன்: செரீனா வில்லியம்ஸ் உருக்கமான பேட்டி

Report Print Balamanuvelan in ரெனிஸ்
0Shares
0Shares
lankasrimarket.com

கடந்த வாரம் Vogue பத்திரிகைக்கு டென்னிஸ் சூப்பர் ஸ்டார் செரீனா வில்லியம்ஸ் அளித்த பேட்டி ஒன்று அமெரிக்காவில் கருப்பினப் பெண்கள் மருத்துவமனைகளில் எவ்விதம் நடத்தப்படுகிறார்கள் என்னும் உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

செரீனாவின் வயிற்றிலிருந்த குழந்தையின் இதயத்துடிப்பு திடீரெனக் குறைந்ததால், அவருக்கு சிசேரியன் அறுவை சிகிச்சை முறையில் பிரசவம் நடைபெற்றது.

அழகான Alexis Olympia என்னும் பெண் குழந்தையைப் பெற்றெடுத்த செரீனாவுக்கு மறுநாள் மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதை அவர் உடனடியாக மருத்துவர்களிடம் தெரிவிக்க அவர்களோ, அது வலிக்காக கொடுக்கப்பட்ட மருந்தின் காரணமாக இருக்கலாம் எனக்கூறிவிட்டனர்.

மீண்டும் அவர் தனக்கு ஏற்கனவே நுரையீரலில் இரத்தக் கட்டிகள் இருந்ததாகக் கூறி ஒரு CT Scan எடுக்கவேண்டும் என்றும் சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் வற்புறுத்தியிருக்கிறார். நீண்ட வற்புறுத்தலுக்குப் பின்னரே அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

வில்லியம்ஸ் ஒரு சர்வதேச சூப்பர் ஸ்டார், கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளைக்குவித்த, இன்னும் குவிக்கப்போகும் ஒருவருக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது?

இந்தக் கேள்விக்கான பதில் உலகையே தலை குனியச் செய்யப்போகிறது.

புகழின் உச்சியிலேயே இருந்தாலும் அமெரிக்காவைப் பொருத்தவரையில் வில்லியம்ஸ்ஒரு ஒரு கருப்பினப் பெண், அவ்வளவுதான்.

அமெரிக்காவில் இன்னும் கருப்பினப் பெண் இரண்டாந்தரக் குடிமகளாகத்தான் நடத்தப்படுகிறாள் என்னும் உண்மையைத்தான் இந்த நிகழ்வு அப்பட்டமாகப் படம்பிடித்துக் காட்டியுள்ளது.

எவ்வளவு படித்தவர்களாக பணக்காரர்களாக இருந்தாலும், அமெரிக்காவில் கர்ப்ப காலத்திலும் பிரசவ நேரத்திலும் உயிரிழக்கும் கருப்பினப் பெண்களின் எண்ணிக்கை வெள்ளையினப் பெண்களைவிட நான்கு மடங்கு அதிகம்.

பணத்தையும் படிப்பையும் இனவெறி தூக்கிச் சாப்பிட்டு விடுகிறது.

வெள்ளையின மருத்துவத்துறை கருப்பின நர்ஸ்களை அவர்கள் அசுத்தமானவர்கள் எனக்கூறி அகற்றவும் வேலை செய்யவிடாமல் தடுத்ததையும் நினைவுகூறத்தான் வேண்டியிருக்கிறது.

தங்கள் பிரச்சினைகள் மருத்துவர்களால் காது கொடுத்துக் கேட்கப்படாததால் உயிரிழந்த கருப்பின கர்ப்பிணிப் பெண்களும் இளம் தாய்மார்களும் எத்தனை பேரோ?

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்