இணையதளம் மூலம் சிறுமிகளை கவர்ந்து துஷ்பிரயோகம்: வசமாக மாட்டிய முதியவர்

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
lankasri.com

பிரித்தானியாவில் 92 வயது முதியவர் ஒருவர் இணையதளம் மூலம் சிறுமிகளை கவர்ந்து பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இச்செயலலில் ஈடுபட்ட Ivor Gifford என்ற 92 வயது முதியவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நாட்டில் சிறுமிகளின் பாதுகாப்பிற்காக செயல்பட்டு வரும் The Hunted One என்ற குழுவே திட்டம் போட்டு Ivor Gifford-வை கையும் களவுமாக பிடித்துள்ளது.

2014ம் ஆண்டு தனது மனைவி இறந்த பின்னர் வீட்டு வேலை செய்ய ஆட்களுக்காக Ivor Gifford இணையத்தை நாடியுள்ளார்.

பின்னர் பல தளங்களில் கணக்கு தொடங்கி சிறுமிகளுடன் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.

இதை கண்டறிந்த The Hunted One இரண்டு சிறுமிகள் பெயரில் போலி கணக்கு தொடங்கி Ivor Gifford-யுடன் பழகியுள்ளனர்.

சிறுமிகள் என நம்பிய Ivor Gifford ஆபாசமான புகைப்படங்கள் அனுப்பி நேரில் சந்திக்க சவுத் வேல்ஸ், லன்ஹில்ட் இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

சம்பவயிடத்திற்கு ஆதாரங்களுடன் சென்ற The Hunted One குழு சிறுமிகளுக்காக காத்திருந்த 92 வயது முதியவரை கையும் களவுமாக பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட Ivor Gifford யூன் 2- ம் திகதி வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments