பிரித்தானியா வானிலை குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் அடுத்த மூன்று மாதங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியா வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு வெப்பமான வானிலை நீடிக்கும் எனவும் இதுவரை இல்லாத அளவு 36 டிகிரி வெப்பநிலை பதிவாக கூட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அதாவது ஜூலையிலிருந்து செப்டம்பர் வரை எப்போதும் ஏற்படும் வெப்பத்தை விட இந்த வருடம் அதிகம் இருக்கும்.

மேலும், ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறும் சூடான காற்றின் பாதிப்பு பிரித்தானியாவிலும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வாளர் Simon Partridge கூறுகையில், திங்களன்று 27 டிகிரியும், வரும் செவ்வாய் கிழமை தென்கிழக்கு பகுதிகளில் 30 டிகிரியும், புதன்கிழமையில் 31 டிகிரி வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இடியுடன் கூடிய மழை தெற்கு பிரித்தானியாவில் வரும் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் பொழியலாம் எனவும் Simon கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் மிகவும் வெப்பமான நாளாக கடந்த ஜூன் 21ஆம் திகதி இருந்தது. அன்று 34.5 டிகிரி வெப்பநிலை லண்டனின் Heathrowல் பதிவானது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments